பிரதமர் அலுவலகம்
மன்னத்து பத்மநாபனின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
02 JAN 2026 9:40AM by PIB Chennai
சுதந்திர போராட்ட வீரரான மன்னத்து பத்மநாபனின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, சமுதாயத்திற்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட அந்த மாபெரும் ஆளுமையை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
உண்மையான முன்னேற்றம் என்பது கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தத்தில் வேரூன்றியுள்ளது என்று நம்பிய ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் மன்னத்து பத்மநாபன் என்று பிரதமர் புகழ்ந்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் மகளிர் அதிகாரம் போன்ற துறைகளில் பத்மநாபனின் முன்னோடி முயற்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அவை நாட்டிற்கு பெரும் உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னத்து பத்மநாபனின் லட்சியங்கள், நீதி, கருணை மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நமக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“மன்னத்து பத்மநாபனின் பிறந்தநாளான இன்று, சமுதாயத்திற்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட அந்த மாபெரும் ஆளுமையை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். உண்மையான முன்னேற்றம் என்பது கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தத்தில் வேரூன்றியுள்ளது என்று நம்பிய ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் அவர். சுகாதாரம், கல்வி, மகளிர் அதிகாரம் போன்ற துறைகளில் அவரது முயற்சிகள் மிகுந்த ஊக்கமளிக்கின்றன. அவரது லட்சியங்கள், நீதி, கருணை மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஒரு சமூகத்தை நோக்கி நமக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன.”
***
Release ID: 2210665
TV/PKV/KR
(रिलीज़ आईडी: 2210722)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam