பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 01 JAN 2026 3:14PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் இன்று (01.01.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1985-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற அவர், 1986 டிசம்பர் 6-ம் தேதி போர் விமான பறக்கும் பிரிவில் பணியில் இணைந்தார். போர் விமானத்தின் அனுபவம் பெற்ற விமானியாகவும் விமானிகளுக்கு கட்டளையிடும் தகுதி வாய்ந்த நபராகவும் போர் விமானப்படைப் பிரிவின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மிக் 21, மிக் 29 போன்ற போர் விமானங்களில் 3,400 மணி நேரத்திற்கும் கூடுதலாக பறந்த அனுபவம் கொண்டவர் பல்வேறு ரக போர்விமானங்களை இயக்குவதில் நிபுணத்துவமும், விமானப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விமானப்படைப் பிரிவில் பல்வேறு நிலைகளில் 39 ஆண்டுகளுக்கும் கூடுதலான பணி அனுபவம் பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210450&reg=3&lang=1

***

AD/SV/KPG/RK


(रिलीज़ आईडी: 2210600) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी