பிரதமர் அலுவலகம்
அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
31 DEC 2025 1:51PM by PIB Chennai
அயோத்தியில் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு விழாவை இந்தியாவின் நம்பிக்கை, கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் தெய்வீக கொண்டாட்டம் என்று திரு நரேந்தர மோடி கூறியுள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எண்ணற்ற பக்தர்களின் சார்பாக பகவான் ஸ்ரீ ராமரின் பாதங்களில் தமது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகள் பழமையான தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், பகவான் ஸ்ரீ ராமரின் அருளாலும் ஆசீர்வாதத்தாலும், ஐந்து நூற்றாண்டுகளாக நீடித்த, கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பம் நனவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். ராம் லல்லா இப்போது மீண்டும் தமது பிரமாண்டமான ஆலயத்தில் குடி கொண்டிருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமரின் உத்வேகம் ஒவ்வொரு குடிமகனின் இதயங்களிலும் சேவை, அர்ப்பணிப்பு இரக்க உணர்வை ஆழப்படுத்தட்டும் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இவை வளமான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு, நரேந்திர மோடி கூறியுள்ளார்.
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2210256)
आगंतुक पटल : 4