குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இளைஞர்கள் தங்களது அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
30 DEC 2025 4:38PM by PIB Chennai
திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவானியோஸ் கல்லூரியின் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய குடியரசுத் துணைத்தலைவர், மர் இவானியோஸ் கல்லூரி போன்ற நிறுவனங்கள் கல்வியின் மாற்றத்தக்க சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்று தெரிவித்தார். கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமின்றி, சமூகத்தை அறியாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சாசன மாண்புகளையொட்டி, கல்வி மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
உலக நாடுகள் தலைமைத்துவம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக இந்தியாவை உற்றுநோக்கியுள்ள நிலையில், வரலாற்றில் இந்தியா ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களுடைய அரசியலமைப்பு உரிமைகளுக்காக மட்டுமின்றி, பன்முகத்தன்மையை மதித்தல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளல், நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு உள்ளிட்ட தங்களுடைய அடிப்படைக் கடமைகளையும் உறுதி செய்ய வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கை 2020, நாட்டின் கற்றல் சூழலை மாற்றியமைப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209829®=3&lang=1
***
TV/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2209879)
आगंतुक पटल : 16