குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மனதில் கொண்டு வளர்ச்சிப் பாதையில் செயல்பட வேண்டும் – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 29 DEC 2025 3:56PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஓல்சிக்கி நூற்றாண்டு விழா மற்றும் 22-வது பார்சி மஹா நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்சந்தால் சமூகத்தினருக்கு சொந்தமாக மொழிஇலக்கியம்கலாச்சாரம் ஆகியவை உள்ளதாக கூறினார். எனினும்நூற்றாண்டுகளுக்கு முன்பாக சந்தாலி மொழிக்காக எழுத்து வடிவம் இல்லாததால்ரோமன்தேவநாகரிஒடியாபெங்காலி போன்ற பல்வேறு எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.  இந்த எழுத்து வடிவங்களில் பல்வேறு சந்தாலி வார்த்தைகள் சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

1925-ம் ஆண்டு பண்டிட் ரகுநாத் முர்மு ஓல் சிக்கி எழுத்து வடிவத்தை உருவாக்கியதாக குறிப்பிட்ட அவர்அதன்மூலம் அந்த எழுத்து வடிவம் சந்தால் சமூகத்தினரின் சக்திமிக்க அடையாளமாக திகழ்ந்துள்ளது என்று கூறினார்.

ஓல் சிக்கி எழுத்து வடிவத்தில் சந்தாலி மொழியில் அரசியல் சாசனத்தை வெளியிடும் வாய்ப்பு தமக்குமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினமான கடந்த டிசம்பர் 25 அன்று கிடைத்ததாக தெரிவித்தார். தற்போது சந்தாலி மொழி பேசும் மக்கள்தங்கள் தாய்மொழி மற்றும் ஓல் சிக்கி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டுள்ள அரசியல் சாசனத்தை படித்து புரிந்துகொள்ள இயலும் என்று அவர் கூறினார்.

எந்தவொரு மொழியிலும் கல்வியை கற்பதற்கு அப்பால்ஓல் சிக்கி எழுத்து வடிவத்தில் தாய்மொழியான சந்தாலி மொழியை கற்பதுசந்தால் சமூகத்தினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். சந்தாலி மொழியின் மேம்பாட்டிற்காக எழுத்தாளர்களும்மொழி ஆர்வலர்களும் ஈடுபட்டு வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மனதில் கொண்டு வளர்ச்சிப் பாதையில் செயல்பட வேண்டும் என்று மக்களை குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறையை சந்தாலி மக்களிடம் இருந்தும்மற்றும் இதர பழங்குடி சமூகத்தினரிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209442&reg=3&lang=1

***

TV/IR/LDN/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2209591) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Odia , Malayalam