புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2025 - ம் ஆண்டில் (நவம்பர் 2025 வரை) 44.5 ஜிகாவாட் என்ற சாதனை படைத்துள்ளது

प्रविष्टि तिथि: 29 DEC 2025 4:46PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் - 26 மாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் சுட்டிக் காட்டப்பட்டத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2030 -  ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தித் திறனை எட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் படி,தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ள பங்களிப்பின் கீழ், 2030 - ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவேஜூன் 2025 - ல்புதைபடிவமற்ற எரிபொருள் ஆதாரங்களிலிருந்து அதன் ஒட்டுமொத்த மின்சக்தி உற்பத்திக்கான நிறுவு திறனில் 50% என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

ஆகஸ்ட் 2025 - ல் புதைபடிவமற்ற மின்சக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறனில் 250 ஜிகாவாட் மைல்கல்லை இந்தியா கடந்தது. நவம்பர் 2025 - ல் ஒட்டு மொத்த புதைபடிவமற்ற மின்சக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறன் 262.74 ஜிகாவாட்டாக உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் (509.64 ஜிகாவாட்) 51.5% ஆகும்.

2025 - ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகபட்ச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் (நவம்பர் வரை) சேர்க்கப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 44.51 ஜிகாவாட் ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 24.72 ஜிகாவாட்டை விட ஏறக்குறைய இருமடங்கு அதிகமாகும். நவம்பர் 2025 - ல் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிறுவு திறன் 253.96 ஜிகாவாட்டை எட்டியுள்ளதுஇது நவம்பர் 2024 - ல் இருந்த 205.52 ஜிகாவாட்டை விட 23% க்கும் கூடுதலாகும்.

எரிசக்தி உற்பத்தித் திறனில் சூரியசக்தி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 20.85 ஜிகாவாட்டுடன் ஒப்பிடுகையில்சூரியசக்தி உற்பத்தித் திறன் 34.98 ஜிகாவாட்டாக உள்ளது. ஜனவரி 2025-ல் சூரிய எரிசக்திக்கன நிறுவப்பட்ட திறன் 100 ஜிகாவாட்  என்ற மைல்கல்லைக் கடந்தது. நவம்பர் 2024-ல் இருந்த 94.17 ஜிகாவாட்டுடன் ஒப்பிடுகையில்நவம்பர் 2025-ல் சூரிய எரிசக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறன் 41% அதிகரித்து 132.85 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.

காற்றாலைத் திறனும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.2 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தித் திறனுடன் ஒப்பிடுகையில்இந்த ஆண்டு 5.82 ஜிகாவாட் திறன் அதிகரித்துள்ளது. மார்ச் 2025-ல் காற்றாலை மின் உற்பத்திக்கான நிறுவு திறன் 50 ஜிகாவாட் என்ற நிலையில் உள்ளது.

29 ஜூலை 2025 அன்றுமின்சார உற்பத்தியில் இந்தியா வரலாற்றுச் சாதனையாக மிக உயர் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு   திறனை எட்டியது. அந்த நாளில்நாட்டின் 203 ஜிகாவாட் என்ற ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 51.5% புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள்  மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. (ஆதாரம்: மின் அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் செய்தி வெளியீடுதேதி 29.10.2025).

சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனில்உலக அளவில்இந்தியா 3 - வது இடத்திலும்காற்றாலை மின்சக்தி திறனில் 4 - வது இடத்திலும்ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கன உற்பத்தித் திறனில்  4 - வது இடத்திலும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209478&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2209516) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Odia , Urdu , हिन्दी , Kannada