குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை முதல் 30-ம் தேதி வரை கோவா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 5:00PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 டிசம்பர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோவா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

டிசம்பர் 27-ம் தேதி மாலை அவர் கோவா செல்லவுள்ளார்.

டிசம்பர் 28-ம் தேதி கர்நாடகா மாநிலம் செல்லும் அவர் கார்வார் துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

டிசம்பர் 29-ம் தேதி  ஜார்க்கண்ட் மாநிலம் செல்லும் குடியரசுத்தலைவர், ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஓல்சிக்கி எழுத்துருவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐடி) 15-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

டிசம்பர் 30-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் கும்ளாவில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் கலாச்சார ஒன்று கூடும் விழாவான கர்த்தி ஜாத்ராவில் அவர் பங்கேற்க உள்ளார்.

***

(Release ID: 2208873)

AD/PLM/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2209006) வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Kannada , Malayalam