சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டத் துறையால் முதன்முறையாக வெளியிடப்பட்டது

இதனை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 25 DEC 2025 3:07PM by PIB Chennai

2025 - ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று, நல்லாட்சி தினம் மற்றும் 1925 - ம் ஆண்டில் பண்டிட் ரகுநாத் முர்முவால் உருவாக்கப்பட்ட ஓல் சிக்கி எழுத்துமுறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை  அமைச்சகத்தின் சட்டத் துறையால் சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வெளியிட்டார்.

2003 - ம் ஆண்டின் 92 - வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சந்தாலி மொழி, இந்தியாவின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களால் இன்றளவும் இம்மொழி பேசப்படுகிறது.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால் மற்றும் சந்தாலி மொழி பேசும் சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட பிற அழைப்பாளர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208484&reg=3&lang=1     

***

AD/SV/RK


(रिलीज़ आईडी: 2208616) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati