குடியரசுத் தலைவர் செயலகம்
பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
24 DEC 2025 1:50PM by PIB Chennai
பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவின் 2024-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள், குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (24.12.2025) சந்தித்தனர். அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் ஆயுதப் படைகளின் கணக்குகளையும் நிதி மேலாண்மையையும் நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பை இந்த அதிகாரிகள் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார். நிதியை செலவிடுதல், கணக்கு தணிக்கை, ஆலோசனை போன்றவற்றில் இந்த அதிகாரிகளின் பணி முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பணிகள் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் படைகளின் தயார் நிலையிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
விரைவான மாற்றங்கள் நிகழும் நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மாறி வரும் புவிசார் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப பாதுகாப்புத் துறை முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். பாதுகாப்புக் கணக்குத் துறை, புதுமைகளுக்கு ஏற்ப தொடர்ந்து நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதிகாரிகள் வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஆர்வத்துடன் திகழ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சேவையின் உண்மையான அளவுகோல் பதவியிலோ அதிகாரத்திலோ மட்டுமே அல்ல என்று அவர் தெரிவித்தார். பணியாற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்கு அளிப்பதிலும் மக்கள் நலனுக்காக செயல்படுவதிலுமே பொது சேவையின் தன்மை அளவிடப்படுவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208059®=3&lang=1
----
TV/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208206)
आगंतुक पटल : 15