இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆட்சி மன்றக் குழு, பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 22 DEC 2025 7:32PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆட்சி மன்றக் குழு, புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், நாடு முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

 

"இந்திய விளையாட்டு சூழலியல்  இப்போது இளமையான காலகட்டத்தில் உள்ளது. மேலும் அது ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் வகையில் அதை எல்லா வழிகளிலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவை. தடகள வீரர்களை மையமாகக் கொண்டு இன்று நாம் எடுக்கும் முடிவுகள், வீரர்கள் தங்களுக்குத் தேவையான சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவையாகும். இதனால் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்பார்த்த பதக்கங்கள் இந்தியாவிற்குக் கிடைக்கும்”, என்று டாக்டர் மாண்டவியா ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் தனது உரையின்போது தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207524&reg=3&lang=1

 

***

 

 

(Release ID: 2207524)

 

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2207608) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Malayalam , Urdu , हिन्दी , Telugu , Kannada