ஆயுஷ்
உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய முக்கிய தொழில்நுட்பக் கூட்டம்
प्रविष्टि तिथि:
22 DEC 2025 4:08PM by PIB Chennai
உலக சுகாதார அமைப்பு , பாரம்பரிய மருத்துவ மேம்பாடு குறித்த இரண்டு நாள் தொழில்நுட்பத் திட்டக் கூட்டத்தை டிசம்பர் 20-21 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஹோட்டல் இம்பீரியலில் ஏற்பாடு செய்தது. இந்த முயற்சி, ஆயுஷ் அமைச்சகத்திற்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையே மே 24 அன்று கையெழுத்திடப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி அமைப்புகளை உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பின் பிரதான நீரோட்டத்தில் கொண்டுவரத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை இந்தியா எளிதாக்குகிறது.
இந்தத் தொழில்நுட்ப அமர்வுகளுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு கவிதா கார்க் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் ஆறு பிராந்தியங்களிலிருந்து பரவலான பங்கேற்பு இருந்தது, இது பாரம்பரிய மருத்துவம் குறித்த ஒரு விரிவான உலகளாவிய கண்ணோட்டத்தை உறுதி செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207398®=3&lang=1
***
SS/PKV/LDN/SE
(रिलीज़ आईडी: 2207497)
आगंतुक पटल : 11