சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புலிகள் மற்றும் யானை பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்து புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புக்கான உத்திகளை ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
21 DEC 2025 1:50PM by PIB Chennai
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 28-வது கூட்டமும், யானைகள் திட்டத்தின் 22-வது வழிகாட்டுதல் குழு கூட்டமும் இன்று (டிசம்பர் 21, 2025) மேற்கு வங்கத்தின் சுந்தரவன புலிகள் காப்பகத்தில் நடைபெற்றன. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெற்றன. புலிகளும் யானைகளும் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள், முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். புலிகள் பாதுகாப்பு திட்டம், யானைகள் தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், இந்தியாவில் புலிளையும் யானைகளையும் பாதுகாப்பதற்கான எதிர்கால உத்திகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய அமைச்சர், உலக அளவில் சிறந்த புலிகள் பாதுகாப்பு நடைமுறைகள் இந்தியாவில் பின்பற்றப்படுவதாக கூறினார். இதில் அறிவியல் அடிப்படையிலான மேலாண்மை, நிலப்பரப்பு அளவிலான திட்டமிடல், சமூக பங்கேற்பு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். 2025 ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற 27-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த நடவடிக்கை அறிக்கை இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் யானைகள் திட்டத்தின் வழிகாட்டுதல் குழு கூட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள் ஆகியோரால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. தென்னிந்தியாவிலும் வடகிழக்கு பகுதியிலும் யானைகள் பாதுகாப்புக்கான செயல் திட்டங்களின் நிலை குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் மனித-யானை மோதல் குறித்தும் அதை தடுப்பது குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207157®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207249)
आगंतुक पटल : 11