சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தில்லி-என்சிஆர் காற்று மாசுபாடு குறித்த நான்காவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
19 DEC 2025 3:02PM by PIB Chennai
தில்லி-என்சிஆர் பகுதியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு நிலையைச் சமாளிப்பதற்காக, தேசிய தலைநகர் பிராந்திய தில்லி, ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட நகராட்சி அமைப்புகளின் செயல் திட்டங்களை விரிவாக ஆய்வு செய்வதற்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் இன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 03.12.2025 அன்று நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டபடி, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், ஒரு கட்டமைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இத்தகைய ஆய்வுக் கூட்டங்களின் வரிசையில் இது நான்காவது கூட்டமாகும். இக்கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங்கும் கலந்து கொண்டார்.
தில்லி-என்சிஆர் பகுதியில் மோசமான காற்றின் தரம் நீடிப்பது குறித்து கவலை தெரிவித்த திரு. பூபேந்திர யாதவ், தற்போது இறுதி செய்யப்பட்டு வரும் செயல் திட்டங்கள் குறித்த ஆய்வுகள் ஜனவரி 2026 முதல் ஒவ்வொரு மாதமும் அமைச்சக மட்டத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். உயர்மட்ட அளவில் நடைபெறும் வழக்கமான மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் மூலம், அமலாக்கம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206502®=3&lang=1
***
VT/PKV/SE
(रिलीज़ आईडी: 2206759)
आगंतुक पटल : 11