PIB Headquarters
azadi ka amrit mahotsav

ஊரகப் பகுதிகளில் நிலையான வருவாயுடன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 18 DEC 2025 11:59AM by PIB Chennai

இந்தியாவில் சமூகப் பாதுகாப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், நிலையான வருவாயை  உறுதி செய்யும் வகையிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கிராமப்புற வளர்ச்சிக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவ்வப்போது மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது. கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிப்பது போக்குவரத்து இணைப்புகளை விரிவுபடுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பரவலாக்குவது, பன்முகத்தன்மை கொண்ட வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதன் காரணமாக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கம் மசோதா 2025 என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு மாற்றாக நீண்டகால அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கவும், வருவாய் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தப் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன் வருவாய்ப் பாதுகாப்பையும் வலுப்படுத்த உதவிடும். 

ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென நான்கு முக்கிய அம்சங்களில் உயர் முன்னுரிமை வழங்க வகை செய்வதுடன் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருவாய் கிடைக்கவும் உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205734&reg=3&lang=1

***

SS/SV/KPG/SE


(रिलीज़ आईडी: 2206693) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam