ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை: நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை என்ஐஎஃப்டி  குறைத்துள்ளது

प्रविष्टि तिथि: 19 DEC 2025 10:01AM by PIB Chennai

தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு  தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஎஃப்டி), ஆடை அலங்கார வடிவமைப்பு, மேலாண்மை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 2026-27-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2026 ஜனவரி 6 (தாமதக் கட்டணத்துடன் ஜனவரி 7 முதல் 10 வரை). தேர்வு 2026 பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. கணினி மற்றும் பேனா-காகித அடிப்படையிலான இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை  நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தவுள்ளது.

2026-27-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, பொது, ஓபிசி  மற்றும் பொது-பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் ரூ.3,000-லிருந்து ரூ.2,000 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.500 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

***

(Release ID 2206345)

VT/PKV/EA


(रिलीज़ आईडी: 2206470) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Malayalam