பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஓமன் பயணத்தின் போது தலைவர்களின் கூட்டு அறிக்கை

प्रविष्टि तिथि: 18 DEC 2025 5:28PM by PIB Chennai

ஓமன் சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில்பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 டிசம்பர் 17-18 தேதிகளில் ஓமன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன்  70-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிப்பதால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

வர்த்தகம்முதலீடுபாதுகாப்புதொழில்நுட்பம்கல்விஎரிசக்திவிண்வெளிவிவசாயம்கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் என இருதரப்பு உறவுகளின் சிறந்த நிலை குறித்து மென்மை தங்கிய சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தி தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். 2023 டிசம்பரில் மாண்புமிகு ஓமன் சுல்தான் இந்தியாவிற்கு வந்திருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டு தொலைநோக்கு ஆவணத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்போதைய முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஓமன் தனது தொலைநோக்குப் பார்வை 2040-ன் கீழ் அடைந்துள்ள பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இந்தியத் தரப்பு பாராட்டு தெரிவித்தது. 2047-க்குள் அதன் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் செயல்பாடுகளை ஓமன் தரப்பு பாராட்டியது. இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வைகளிலும் உள்ள ஒற்றுமையை தலைவர்கள் இருவரும்  குறிப்பிட்டதுடன்பரஸ்பர ஈடுபாடுள்ள துறைகளில் இணைந்துப் பணியாற்ற இசைவு தெரிவித்தனர். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய தூணாக வர்த்தகமும்வணிகமும் உள்ளன  என்று  இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். இருதரப்பு வர்த்தகத்தில் மேலும் வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மைக்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் வலியுறுத்தினர். ஜவுளிவாகனங்கள்ரசாயனங்கள்உபகரணங்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு பொருளாதார உறவில் ஒரு முக்கிய மைல்கல்லான இந்திய-ஓமன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) கையெழுத்தானதை இரு தரப்பினரும் வரவேற்றனர். சிஇபிஏஇரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வர்த்தக தடைகளைக் குறைத்துநிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சிஇபிஏ இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று தலைவர்கள் தெரிவித்தனர். சிஇபிஏபொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு வரத்துகளை அதிகரிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206044&reg=3&lang=1

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2206317) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam