ரெயில்வே அமைச்சகம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் கையாள இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
18 DEC 2025 2:46PM by PIB Chennai
2025-26 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலகட்டத்தில், எதிர்பார்க்கப்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கையாள, இந்திய ரயில்வே எட்டு மண்டலங்களில் சிறப்பு ரயில்களை விரிவாக இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதுவரை மொத்தம் 244 சிறப்பு நடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலும் பல ரயில்களும், நடைகளும் அறிவிக்கப்படும்.
மும்பை–கோவா (கொங்கன்) வழித்தடத்தில், தினசரி மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை வழியில் உள்ள முக்கிய நிறுத்தங்களை உள்ளடக்கி, கூடுதல் இருக்கை மற்றும் படுக்கை வசதிகளை வழங்குகின்றன. இதேபோல், மும்பை–நாக்பூர், புனே–சங்கானேர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு சேவைகள், பண்டிகைக் காலத்தில் வழக்கமான ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகளுக்கு உதவுகின்றன. மேலும், வசதியான பயண விருப்பங்களையும் வழங்குகின்றன. வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில், தில்லி, ஹவுரா, லக்னோ மற்றும் அருகிலுள்ள நகரங்களை இணைக்கும் பரபரப்பான வழித்தடங்களில், சொந்த ஊர்களுக்கோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்கோ செல்லும் நீண்ட தூரப் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில், ஹைதராபாத், பெங்களூரு, மங்களூரு மற்றும் பிற நகரங்களை இணைக்கும் கூடுதல் சேவைகள், இந்த விழாக் காலத்தில் பயணிகளுக்குச் சீரான பயணத்தை உறுதி செய்கின்றன. இவை பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் கையாள பல பயணங்களை வழங்குகின்றன. இந்த சிறப்பு ரயில்களை இயக்குவதன் மூலம், இந்திய ரயில்வே கூடுதல் பயணிகளை கையாண்டு, வசதி மற்றும் சௌகரியத்தை வழங்குகிறது. இது பயணிகள் எவ்வித சிரமமுமின்றி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2026-ஐக் கொண்டாட உதவுகிறது. மேலும் அவர்களை இந்தியா முழுவதும் உள்ள கடற்கரைகள், நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுடன் சிறப்பாக இணைக்கிறது.
***
(Release ID: 2205806)
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2206256)
आगंतुक पटल : 31