தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
17 DEC 2025 2:23PM by PIB Chennai
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக ஆபாசமான, அருவருப்பான காட்சிகளை ஒளிபரப்பாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கத்தை எதிர்கொள்வதற்கான சட்டக் கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடையீட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்ட தொகுப்பு) விதிகள், 2021 (தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021) ஆகியவை இணைந்து, டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோத மற்றும் கேடு விளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தடை செய்யும் ஒரு கடுமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
இது பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், இடையிட்டுக்கான கடமைகள் குறித்த தெளிவான நெறிமுறைகளை விதிக்கிறது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், தனியுரிமை மீறல்கள் (பிரிவு 66E), ஆபாசமான அல்லது பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல் (பிரிவுகள் 67, 67A, 67B) போன்ற பல்வேறு இணையவழிக் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வகை செய்கிறது.
மக்களவையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிஷிகாந்த் துபே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205140®=3&lang=1
***
(Release ID:220514)
AD/SV/SE
(रिलीज़ आईडी: 2205573)
आगंतुक पटल : 11