உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 16 DEC 2025 7:12PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு  முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம்பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் சமூகத்தை வலுப்படுத்தபிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படிபேரிடர் மேலாண்மைக்குப் பங்களிக்கும் வகையில் சமூகத்தின் அடித்தட்டு அளவில் அணுகுமுறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

இந்தத் திட்டம்20 மாநிலங்களில் உள்ள பேரிடர் அபாயமுள்ள 81 மாவட்டங்களை உள்ளடக்கும். மேலும்உள்ளூர் DRR-க்கான மாதிரிகளாகச் செயல்பட20 கிராம பஞ்சாயத்துகள் மேம்படுத்தப்படும்.

மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.507.37 கோடியில்தேசியப் பேரிடர் தணிப்பு நிதியில்  இருந்து ரூ.273.38 கோடியும்பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூலம் ரூ.151.47 கோடியும் மத்தியப் பங்காக வழங்கப்படும். மீதமுள்ள நிதி மாநில அரசுகளின் பங்காக இருக்கும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளில்பேரிடர் அபாயக் குறைப்பை மேம்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைத்தல்திறன் மேம்பாடுவிழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். மாநிலங்களுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட மாநிலப் பேரிடர் பதிலளிப்பு நிதி  மற்றும் தேசியப் பேரிடர் பதிலளிப்பு நிதி  தவிரஇந்தக் கூடுதல் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204819&reg=3&lang=1

***

AD/VK/SE


(रिलीज़ आईडी: 2204914) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Telugu