புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டம் 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லாமல் செய்துள்ளது
प्रविष्टि तिथि:
16 DEC 2025 12:14PM by PIB Chennai
மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 19,45,758 வீடுகளின் மேல் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 48,652 வீடுகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2,066 வீடுகளிலும் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 24,35,196 குடும்பங்கள் பயனடைகின்றன.
கூடுதலாக, கிராமப்புற வீடுகள் அல்லது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204466®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2204677)
आगंतुक पटल : 23