சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் 2026 – யாத்ரீகர்களுக்கான அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
15 DEC 2025 2:12PM by PIB Chennai
ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் ஹஜ் யாதரீகர்கள் குறித்த பதிவுகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்படி, அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் பதிவுக்கான முறைகளை 15.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அதன் மூலம் தங்களுக்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவை ஒப்பந்தங்களை உறுதி செய்து கடைசிநேர சிரமத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் பதிவு நிலை, ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் குறித்து சரிபார்த்துக் கொள்ளுமாறும் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204022®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2204105)
आगंतुक पटल : 15