தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சினிமாடோகிராஃப் சட்டத்தின் கீழ் வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வ திரைப்பட சான்றிதழ் செயல்முறையை அரசு முன்னிலைப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
12 DEC 2025 3:49PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம், திரைப்படங்களின் பொதுக்காட்சிக்கான சான்றிதழ்களை சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952, சினிமாட்டோகிராஃப் சான்றிதழ் விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களின் கீழ் வழங்குகிறது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஒழுக்கம், அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை உள்ளடக்கம் மீறினால் மட்டுமே காட்சி நீக்கப்படுதல் அல்லது மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020–21 முதல் 2024–25 வரை), மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் 71,963 திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளித்துள்ளது.
வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சினிமாட்டோகிராஃப் சட்டம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற வழக்குகள் நீதித்துறை நடவடிக்கைகளின் முடிவுகளுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன.
அரசும் வாரியமும் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன, அதே நேரத்தில் சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் கீழ் அதன் கடமைகளையும் நிறைவேற்றுகின்றன.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
(Release ID: 2202949)
****
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2203381)
आगंतुक पटल : 6