தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் கண்காணிக்கப்படுகின்றன, ஆனால் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முன்மொழியப்படவில்லை: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தகவல்

प्रविष्टि तिथि: 12 DEC 2025 5:19PM by PIB Chennai

இந்தியத் திரைப்படத் துறையில் உரையாடல்கள், கதைக்களங்கள் மற்றும் திரைக்கதைகளை உருவாக்குவது உட்பட திரைப்படம் மற்றும் ஊடக திரைக்கதை எழுதுதலில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருவது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

1952 ஆம் ஆண்டு திரைப்படச் சட்டத்தில் திருத்தம் மூலம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைக்கதை எழுதுதலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை.

மாநிலங்களவையில் இன்று திரு எஸ் நிரஞ்சன் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இதனைத் தெரிவித்தார்.

(Release ID: 2203111)

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2203370) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam