ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2004–14-ல் 171 ஆக இருந்த வருடாந்தர சராசரி ரயில் விபத்துகள் 2025–26-ல் (இதுவரை) 11 ஆகக் குறைந்துள்ளது.

प्रविष्टि तिथि: 12 DEC 2025 2:01PM by PIB Chennai

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எந்தவொரு அசாதாரண சம்பவமும் ரயில்வே நிர்வாகத்தால் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப காரணம்  தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என சந்தேகிக்கப்படும் இடங்களில், மாநில காவல்துறையின் உதவியும் பெறப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலும் பெறப்படுகிறது. இருப்பினும், முதன்மை விசாரணை வழிமுறைகள் மாநில காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் சட்ட ஏற்பாடுகளின் கீழ் குற்றச் செயல்கள், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பின் பாதுகாப்பு அதாவது தண்டவாளங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றில் விசாரணை செய்வது  மாநில அரசின் பொறுப்பாகும்.

2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பதிவான அனைத்து ரயில் பாதை நாசவேலை/சேத சம்பவங்களிலும், மாநில காவல்துறை/ஜிஆர்பி மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றுடன் அவர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட விபத்துப் புள்ளிகள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளில்  ரயில்வே பணியாளர்கள், ஆர்.பி.எஃப், ஜி.ஆர்.பி மற்றும் சிவில் போலீசார் இணைந்து அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ஆபத்துள்ள பகுதிகள், பாதிக்கப்படும் பிரிவுகளில் ரோந்து செல்வதற்கும், அச்சுறுத்தல்களைக் குறைக்க உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் பாதைகளுக்கு அருகில் கிடக்கும் பொருட்களை அகற்ற தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை குற்றவாளிகளால் ரயில் பாதையில் தடையாகப் பயன்படுத்தப்படலாம்.

2004-14 காலகட்டத்தில் அதன் விளைவாக ஏற்பட்ட ரயில் விபத்துகள் 1711 (ஆண்டுக்கு சராசரியாக 171) ஆக இருந்தன, இது 2024-25 ஆம் ஆண்டில் 31 ஆகவும், 2025-26 ஆம் ஆண்டில் (நவம்பர், 2025 வரை) 11 ஆகவும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

இந்தத் தகவலை மத்திய ரயில்வே, தகவல், ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிகையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202873&reg=3&lang=1

***

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2203013) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada