மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குறிப்பிட்ட அளவிலான பாதிப்புடன் கூடிய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தை விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வசதியை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2025 11:22AM by PIB Chennai

குறிப்பிட்ட அளவிலான பாதிப்புடன் கூடிய பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக தேர்வு மையங்களை தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வசதியை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்கள் மற்றும் சில சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேர்வாணையம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட அளவிலான பாதிப்புடன் கூடிய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களில் விருப்பத்தின் அடிப்படையில், தேர்வு மையங்களை குறிப்பிட முடியும்.

கடந்த 5 ஆண்டுகளாக தேர்வு மையங்கள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, தில்லி, கட்டாக், பாட்னா, லக்னோ உள்ளிட்ட சில தேர்வு மையங்கள் அதிக விண்ணப்பங்களால் விரைவாக நிரம்பிவிடுவது கண்டறியப்பட்டதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.  இதனால், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேர்வு மையத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாய சூழல் காரணமாக, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்துகிறது. பணியாளர் தேர்வாணையத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வசதியான தேர்வு மையத்தை  தேர்ந்தெடுத்துக் கொள்வதை உறுதி செய்கிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202733&reg=3&lang=1

 

***

SS/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2202954) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Malayalam