குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பண்டிட் ரவி ஷங்கரின் நினைவு நாளில் குடியரசுத் துணைத்தலைவர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 1:50PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (11.12.2025) பண்டிட் ரவிஷங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்திய பாரம்பரிய இசைக்கு உலகளாவிய பெருமையைப் பெற்றுத் தந்த புகழ்பெற்ற சிதார் மேதையாக ரவி ஷங்கர் திகழ்ந்தார் என திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், பண்டிட் ரவிஷங்கர் சிறந்த கலாச்சாரத் தூதர் என்றும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலத்தால் அழியாத அவரது கலைத்திறன், தலைமுறை தலைமுறையாக இசைக்கலைஞர்களையும் இசை ஆர்வலர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2202182)
AD/PLM /SH
(रिलीज़ आईडी: 2202396)
आगंतुक पटल : 11