நிதி அமைச்சகம்
கிராமப்புற மக்களின் வருமானமும் நுகர்வும் பெரிதும் அதிகரித்துள்ளது - நபார்டு வங்கி ஆய்வில் தகவல்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 9:57AM by PIB Chennai
நபார்டு வங்கியின் கிராமப்புற பொருளாதார சூழல் தொடர்பான எட்டாவது சுற்று ஆய்வில் (ஆர்இசிஎஸ்எஸ்), கடந்த ஆண்டில் கிராமப்புற தேவைகளில் பெரிய அளவிலான அதிகரிப்பும், வருமான உயர்வும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆர்இசிஎஸ்எஸ் என்பது செப்டம்பர் 2024 முதல் நபார்டு வங்கியால் நடத்தப்படும், இருமாத மதிப்பீடாகும். இந்த ஆய்வு, கிராமப்புற பொருளாதார மாற்றங்களை மதிப்பிட உதவும் தரவுத்தொகுப்பை வழங்குகிறது.
கடந்த ஒரு வருடமாக கிராமப்புற பொருளாதார அடிப்படைகள் தெளிவாக வலுப்பெற்றுள்ளன. வலுவான நுகர்வு, அதிகரித்து வரும் வருமானம், மிதமான பணவீக்கம், ஆரோக்கியமான நிதிச் சூழல் ஆகியவற்றால், நாட்டின் கிராமப்புற வளர்ச்சி நேர்மறையான பாதையில் செல்கிறது.
முக்கிய அம்சங்கள்:
* வாங்கும் சக்தி அதிகரிப்பால் நுகர்வு அதிகரிப்பு
* கடந்த ஆண்டில் சுமார் 80% கிராமப்புற குடும்பங்கள் தொடர்ந்து அதிக நுகர்வைப் பதிவு செய்துள்ளன. இது அதிகரித்து வரும் செழிப்பின் அடையாளமாகும்.
* மாத வருமானத்தில் 67.3% இப்போது நுகர்வுக்காக செலவிடப்படுகிறது.
* கிராமப்புற குடும்பங்களில் 42.2% வருமான வளர்ச்சியை அடைந்துள்ளன.
* வெறும் 15.7% பேர் மட்டுமே வருமான சரிவைச் சந்தித்துள்ளனர்.
* 75.9% பேர் அடுத்த ஆண்டு வருமானம் உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
* சாலைகள், கல்வி, மின்சாரம், குடிநீர், சுகாதார சேவைகள் போன்றவற்றில் கிராமப்புற குடும்பத்தினர் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நபார்டின் கிராமப்புற பொருளாதார சூழல் கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இது வருமானம், நுகர்வு, பணவீக்கம், கடன், முதலீடு, எதிர்பார்ப்புகள் தொடர்பான மக்களின் எண்ணங்கள், தரவுகள் என இரண்டையும் எதிரொலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202010®=3&lang=1
***
AD/PLM /KR
(रिलीज़ आईडी: 2202193)
आगंतुक पटल : 24