தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

प्रविष्टि तिथि: 10 DEC 2025 1:15PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சத்ய நாதெல்லா ஆகியோர்  முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புதுதில்லியில் கையெழுத்திட்டது. வேலைவாய்ப்பு இணைப்புகளை விரிவுபடுத்துதல், செயற்கை நுண்ணறிவு  (ஏஐ)  தலைமையிலான திறன் மேம்பாட்டை அளவிடுதல் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுக்கு இந்தியாவின் பணியாளர்களை தயார்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

இந்தக் கூட்டாண்மையின் மைய அம்சம் என்பது மைக்ரோசாப்ட் அதன் விரிவான சர்வதேச வலையமைப்பிலிருந்து 15,000+ பணிவழங்குவோர் மற்றும் கூட்டாளிகளை அமைச்சகத்தின் தேசிய தொழில் சேவை தளத்திற்கு ஊக்குவிப்பதற்கான செயல்பாடாகும். இது முறையான வேலை அணுகலைக் கணிசமாக விரிவுபடுத்தும், உயர் வளர்ச்சித் துறைகளை ஆதரிக்கும், உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி, உலகிற்கும் திறமையான பணியாளர்களை உருவாக்க இந்தியாவை தயார்படுத்தும், இந்தியத் தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச இயக்கத்திற்கான பாதைகளை வலுப்படுத்தும்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தக் கூட்டாண்மையை வரவேற்றார், இது இந்தியாவின் சாதகமான மக்கள்தொகையைப் பயன்படுத்திக் கொள்ளவும், உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த, டிஜிட்டல் திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்கவும் ஒரு பகிரப்பட்ட லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மைக்ரோசாப்ட் பங்கேற்பு வேலை அணுகலைத் துரிதப்படுத்தும், திறன் மேம்பாட்டை ஆழப்படுத்தும், உலகளாவிய தொழிலாளர் இயக்கத்தில் இந்தியாவின் தலைமையை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201346&reg=3&lang=1

****

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2201947) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu