உள்துறை அமைச்சகம்
விரைவான நீதித்துறை செயல்முறைக்கு வழிவகுக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள்
प्रविष्टि तिथि:
10 DEC 2025 2:44PM by PIB Chennai
நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக புதிய குற்றவியல் சட்டங்களில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
புதிய சட்டங்கள் வழக்குகளுக்கு விரைவான, நியாயமான தீர்வை ஏற்படுத்த உறுதியளிக்கின்றன. இவை சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
* இதன்கீழ் முதற்கட்ட விசாரணை 14 நாட்களில் முடிக்கப்படும். அடுத்தகட்ட விசாரணை 90 நாட்களில் முடிக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் 14 நாட்களுக்குள் ஆவணங்கள் வழங்கப்படும்.
* புதிய சட்டங்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
* வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கவும், சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகள் வழங்கப்படும்.
பாரதிய நியாய சன்ஹிதா -2023 எனப்படும் இந்திய நியாயச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 51,32,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 85,353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201410®=3&lang=1
(Release ID: 2201410)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2201945)
आगंतुक पटल : 6