வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்புத் திட்டத்தின் கீழ் 1,243 பொருட்களின் விற்பனைக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
10 DEC 2025 3:02PM by PIB Chennai
நாட்டின் அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ஜவுளி, வேளாண்மை, உணவுப்பதப்படுத்துதல், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 775 மாவட்டங்களில் 1,243 தயாரிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை https://static.investindia.gov.in/s3fs-public/2025-08/20250819_v32_odop_product_list.pdf என்ற இணையதளத்தில் காணலாம். இப்பொருட்களின் தயாரிப்புக்கான மேம்பாடு மற்றும் ஏற்றுமதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201421®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201742)
आगंतुक पटल : 11