வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டில் உள்நாட்டு வர்த்தக மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறையின் செயல்பாடு

प्रविष्टि तिथि: 10 DEC 2025 11:03AM by PIB Chennai

தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் உற்பத்தி திறன்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், 1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் 14 முக்கிய துறைகளுக்கு தொடங்கப்பட்டது. 14 துறைகளில் 2025 ஜூன் மாதம் வரை ரூ.1.88 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் உற்பத்தி மற்றும் விற்பனை ரூ.17 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்து 12.3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவானது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மூலம் மின்னணு, மருந்து துறை, தொலைத்தொடர்பு, மென்பொருள் உபகரணங்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற துறைகளில் ரூ.7.5 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி அதிகரித்தது.

2016-ம் ஆண்டு அரசு தொடங்கிய புத்தொழில் இந்தியா முன்முயற்சி நாட்டில் புத்தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது. இதுவரை மொத்தம் 2,01,335 புத்தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் 21 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகளிர் சக்தி உத்வேகம் காரணமாக இந்திய புத்தொழில் சூழலில் மகளிர் தொழில்முனைவோர்கள் பெரும் பங்களித்துள்ளனர். இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 48 சதவீதத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார்.

மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு மூலம் 2025 அக்டோபர் மாதம் வரை 326 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் 2025 அக்டோபர் மாதத்தில் 18.2 மில்லியன் அளவிற்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்தது. நாள்தோறும் சராசரி பரிவர்த்தனைகள் 5,90,000-க்கும் மேல் இருந்தது.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பிராந்திய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு என்ற முன்முயற்சியின் மூலம் ஒரு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருளின் விற்பனையை மேம்படுத்த வகை செய்யப்பட்டது. அந்த வகையில் 775 மாவட்டங்களில் 1,240-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் கண்டறியப்பட்டது.

தொழில்துறை உற்பத்தி, 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.    இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.

இந்தியா நேரடி அந்நிய முதலீட்டை பெருமளவில் ஈர்த்து வருகிறது. 2000-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை 1.1 ட்ரில்லியன் டாலர் அளவிலான நேரடி அந்திய முதலீடு கிடைத்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் 36.05 பில்லியன் டாலர் அளவிலான நேரடி அந்நிய முதலீடு கிடைத்த நிலையில் அது 2024-25-ம் ஆண்டில் 80.62 பில்லியன் டாலராக இரட்டிப்பாகியது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக (2014-2025) இந்தியா 748.38 பில்லியன் டாலரை எட்டியது. இது அதற்கு முந்தைய 11 ஆண்டுகளில் (2003-14) பெறப்பட்ட 308.38 பில்லியன் டாலரை விட 143 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201280&reg=3&lang=1   

***

SS/IR/RJ/RK


(रिलीज़ आईडी: 2201407) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English