பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2025 8:51AM by PIB Chennai

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவரின் துணிச்சலையும் பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று நினைவு கூர்ந்தார்.

அசாம் இயக்கம் தொடர்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாகவும், மாநிலத்திற்கான கலாச்சார வலிமை மற்றும் முழுமையான வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான அரசின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"அசாம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவரின் வீரத்தையும் ஸ்வாஹித் தினமான இன்று நாம் நினைவுகூர்கிறோம். இந்த இயக்கம் நமது வரலாற்றில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். அசாம் இயக்கத்தில் பங்கேற்றவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை, குறிப்பாக அசாமின் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்."

***

(Release ID: 2201223)

SS/SMB/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2201337) வருகையாளர் எண்ணிக்கை : 57