இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான சில்வர் பீகாக் விருது நடிகர் யூபைமர் ரியோஸுக்கு வழங்கப்பட்டது
கோவாவில் கோலாகலமாக நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், கொலம்பியத் திரைப்படமான 'எ போயட்'- ல் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் யூபைமர் ரியோஸுக்கு மதிப்புமிக்க சிறந்த நடிகருக்கான சில்வர் பீகாக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் போட்டிகள் பிரிவில் போட்டியிட்ட இப்படத்தில், ரியோஸின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு நடுவர் குழுவினரால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த உயரிய அங்கீகாரம் சில்வர் பீகாக் விருது, சான்றிதழ் ஆகியவற்றுடன் சேர்த்து, ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசையும் கொண்டுள்ளது.
இந்த விருதினை, கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இணைந்து ரியோஸுக்கு வழங்கினர். அப்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் திரு சஞ்சய் ஜாஜு, திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவர் திரு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விழா இயக்குநர் திரு சேகர் கபூர் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196133®=3&lang=1
***
SS/VK/RK
रिलीज़ आईडी:
2200779
| Visitor Counter:
7