பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:49PM by PIB Chennai
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி வழங்க ஏதுவாக குழாய்களை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான குழாய்களை அமைப்பது, அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது அதன் செயலாக்கம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான அனுமதியை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் வழங்குகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மீது இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான பிரத்யேக குழாய்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், சுமார் 34,232 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக என்ஜிபிஎல் நிறுவனத்திற்கு இந்த வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 25,429 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக எரிவாயு விநியோக குழாய்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துளள்து.
எஞ்சியுள்ள 10,459 கிலோ மீட்டர் நீளத்திற்கான குழாய்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200386®=3&lang=1
****
AD/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2200607)
आगंतुक पटल : 10