ஜல்சக்தி அமைச்சகம்
நாட்டில் 5,67,873 கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன - மத்திய அமைச்சர் திரு சோமண்ணா
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:08PM by PIB Chennai
நாட்டில் 4.12.2025 வரை 5,67,873 கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமங்கள் 3 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
முன்னோடி: திடக்கழிவு மேலாண்மை அல்லது திரவக் கழிவு மேலாண்மை ஏற்பாடுகளுடன் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியைக் கொண்ட கிராமம்.
தயார் நிலை: திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கான ஏற்பாடுகளுடன் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியைக் கொண்ட கிராமம்.
மாதிரி: திடக்கழிவு மேலாண்மை அல்லது திரவக் கழிவு மேலாண்மை ஏற்பாடுகளுடன் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியைக் கொண்ட கிராமம்; குறைந்த அளவிலான குப்பைகள், குறைந்தபட்சம் தேங்கி நிற்கும் கழிவுநீர், பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படாமல் இருத்தல்; திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதி குறித்த தகவல், கல்வி மற்றும் தகவல் போன்றவற்றை கண்காணித்தல்.
திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிக்கான அனைத்து விதிகளையும் கொண்ட கிராமம், திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதி என கிராமசபை கூட்டத்தில் தாமாகவே அறிவிக்க முடியும்.
முதன்முறையாக இந்த நிலையைப் பெற்ற 90 நாட்களுக்குள் 3-வது நபரின் சரிபார்த்தலை மாவட்ட நிர்வாகம் அவசியம் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், சம்பந்தப்பட்ட வட்ட, மாவட்ட மற்றும் மாநில நிலைகளில் பொறுப்பு அதிகாரிகள் மூலம் மேற்பார்வை சரிபார்த்தலில் ஈடுபாடுவார்கள்.
இத்தகவலை ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா மாநிலங்களவையில் இன்று (08 டிசம்பர் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200341®=3&lang=1
****
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2200579)
आगंतुक पटल : 9