புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்பில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்க ஆர்டிஐ நிதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 06 DEC 2025 6:35PM by PIB Chennai

பஞ்ச்குலாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (06.12.2025) பங்கேற்றார். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைக் கண்டுபிடிப்பு (ஆர்டிஐ) நிதித் திட்டத்தை  அரசு செயல்படுத்துவதாக அவர் கூறினார். இந்தச் சூழலில், இந்தியாவின் ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலை சிறப்பாக மாற்றுவதில் தனியார் தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் தீவிரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கல்வித்துறை, புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோரிடையே உரையாற்றிய அமைச்சர், அறிவியல் கொள்கையின் வெற்றியை வெளியீடுகளால் மட்டும் அளவிடக்கூடாது என்று கூறினார். மாறாக ஆராய்ச்சிகளின் உண்மையான விளைவுகள், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பத் திறன்கள் ஆகியவற்றால்தான் வெற்றியை அளவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியாவின் லட்சியங்களுக்கு தனியார் துறை பங்கேற்பு மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, நவம்பரில் பிரதமரால் முறையாகத் தொடங்கப்பட்ட ஆர்டிஐ நிதித் திட்டத்தின் வரையறைகள் தொடர்பான விளக்கங்கள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டன. தனியார் துறையின் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த நிதித் திட்டம், தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி, வணிக ரீதியான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199848&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2199911) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , हिन्दी