உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ரத்தான விமானங்களின் கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற ஏற்பாடு - இண்டிகோ நிறுவன நெருக்கடியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
06 DEC 2025 1:47PM by PIB Chennai
விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட அல்லது தடை ஏற்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத் தொகையை பயணிகளுக்கு திருப்பி வழங்கும் நடைமுறையை நாளை (டிசம்பர் 7, 2025) இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை திருப்பி வழங்கும் நடைமுறையில் ஏதேனும் தாமதம் அல்லது விதிகளுக்கு உட்படாத நிலை ஏற்பட்டால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறை தீர்க்கும் பணிகளை தடையற்ற வகையில் மேற்கொள்வதற்காக, இண்டிகோ நிறுவனம் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பிரத்யேக பிரிவுகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளைத் தொடர்பு கொள்ளவும், சிக்கல் இல்லாமல் அவர்கள் பணத்தைத் திரும்பப் பெறவும், மாற்று பயண ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்தப் பிரிவுகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக் காலத்தில் பயணிகளின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199762®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2199828)
आगंतुक पटल : 42