பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை திரு நரேந்திர மோடி, திரு விளாடிமிர் புடினுக்கு வழங்கினார்

प्रविष्टि तिथि: 05 DEC 2025 10:30AM by PIB Chennai

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

இன்று மாலையும் நாளையும் அவருடன் நடைபெறும் உரையாடல்களை எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு காலத்தால் மாறாத ஒன்று எனவும், இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினுக்கு, பிரதமர் திரு திரு நரேந்திர மோடி வழங்கினார். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

 

"எனது நண்பர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இந்தியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று மாலையும் நாளையும் எங்களுக்கு இடையே நடைபெறவுள்ள உரையாடல்களை எதிர்நோக்கியுள்ளேன். இந்தியா-ரஷ்யா நட்பு என்பது காலத்தால் மாறாத ஒன்றாகும். இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது."

"எனது நண்பர் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை எண். 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வரவேற்றேன்."

"ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன."

----

Release ID: 2199260

SS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2199410) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam