மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு

प्रविष्टि तिथि: 05 DEC 2025 11:35AM by PIB Chennai

வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் சோதனையாளர்  பதவி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர்  அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள நூறு காலியிடங்களுக்கும், யுபிஎஸ்சி-யில் இரண்டு துணை இயக்குநர் பதவிகளுக்கும்  தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வரவேற்கிறது.

விரிவான விளம்பர எண். 14/2025, வேட்பாளர்களுக்கான வழிமுறைகளுடன் ஆணையத்தின் வலைத்தளமான https://upsc.gov.in-ல் பதிவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்ப போர்டல் https://upsconline.nic.in மூலம் 2025 டிசம்பர் 13 முதல் 2026 ஜனவரி 01,  வரை விண்ணப்பிக்கலாம்.

வேட்பாளர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

(Release ID: 2199242)

SS/PKV/KPG/KR


(रिलीज़ आईडी: 2199341) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati