விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 508 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன- மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 04 DEC 2025 4:29PM by PIB Chennai

நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செயற்கைக் கோள்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2004-ம் ஆண்டு ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை 31 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் 23 உள்நாட்டு செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 398 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் 56 உள்நாட்டு செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ் ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் 2019-ம் ஆண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரை செயற்கைக் கோள்களை செலுத்தியதன் மூலம் சுமார் 2,572 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198759&reg=3&lang=1

****

AD/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2199137) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu