PIB Headquarters
கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் காக்கும் தொழிலாளர் சட்டங்கள்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 2:17PM by PIB Chennai
அண்மையில் அமலுக்கு வந்த தொழிலாளர் சட்டங்கள் மூலம், இந்தியா பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் நலனை வலுப்படுத்தியுள்ளது. தொழிலாளர் சட்டங்கள், அதாவது ஊதியச் சட்டம் - 2019, தொழில்துறை உறவுகள் சட்டம் - 2020, சமூகப் பாதுகாப்பு சட்டம் - 2020, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டம்- 2020 ஆகியவை கட்டடத் தொழிலாளர்களுக்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இத்துறை பெரிய பணியாளர்கள் எண்ணிக்கையைக் கொண்டது. ஊதியப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, முறையான ஆவணங்கள் போன்றவற்றை ஒருங்கிணைந்த அணுகுமுறையின் கீழ் கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, கட்டுமானத் தொழிலாளர்கள் மிகவும் நிலையான பணி வாய்ப்புகளைப் பெற்று இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் சிறப்பாக பங்கேற்பார்கள்.
தொழிலாளர் சட்டங்கள், கட்டட தொழிலாளர்களுக்கு வலுப்படுத்தப்பட்ட நலத்திட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துகின்றன. இது பணியிட நிலைமைகளை மேம்படுத்தி, அதிக பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்த சீர்திருத்தங்கள் வருமான ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகின்றன. சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் சந்திக்கும் பாதிப்புகளைக் குறைத்து, நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றன.
*அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக எந்தவொரு பணியாளருக்கும் ஊதியம் வழங்கக்கூடாது. ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத இடைவெளியில் இந்த விகிதங்களை அரசு திருத்தியமைக்க அல்லது மறுபரிசீலனை செய்யும். தொழிலாளியின் திறன் நிலை மற்றும் வேலையின் தன்மையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
*உணவு, உடை போன்ற ஒரு பணியாளரின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில், நிலையான ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்படும். அது வழக்கமான இடைவெளியில் மாற்றி அமைக்கப்படும் .
* ஒரே மாதிரியான வேலைக்கான, ஊதிய விஷயத்தில் பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது.
தொழிலாளர் சீர்திருத்தங்கள் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பையும் நலனையும் வலுப்படுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை, சட்டப்பூர்வ பொறுப்பு, உலகளாவிய பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சீர்திருத்தங்கள் பாதுகாப்பான பணியிடங்களையும், அதிகாரம் பெற்ற தொழிலாளர்களையும் உருவாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198662®=3&lang=1
***
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2198859)
आगंतुक पटल : 9