பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – பிரான்ஸ் விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
04 DEC 2025 11:58AM by PIB Chennai
இந்தியா – பிரான்ஸ் விமானப்படைகள் இடையேயான 8-வது இருதரப்பு கூட்டுப் பயிற்சியான கருடா-25 பிரான்ஸ் நாட்டின் மாண்-டே- மார்சனில் உள்ள விமானப்படைத் தளத்தில் 2025 நவம்பர் 27 அன்று நிறைவடைந்தது. இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய விமானப்படை வீரர்கள், 2025 டிசம்பர் 2 அன்று தாயகம் திரும்பினார்கள்.
இப்பயிற்சியில் இந்திய விமானப்படையின் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்கள் வான்வெளியிலேயே எரிபொருள் நிரப்பக் கூடிய ஐஎல்-78 ரக விமானம், சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் இருநாடுகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு இருநாட்டுப் படை வீரர்களின் செயல்பாடு, உறுதிப்பாடு ஆகியவற்றைப் பாராட்டினர்.
கருடா-25 பயிற்சி இந்த ஆண்டு இந்திய விமானப்படை மேற்கொண்ட மிகப் பெரிய சர்வதேச விமானப்படை பயிற்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198620®=3&lang=1
----
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2198727)
आगंतुक पटल : 7