சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லியில் நிலவும் காற்றின் தரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
03 DEC 2025 1:51PM by PIB Chennai
தில்லியில் நிலவும் காற்றின் தரம் குறித்து இன்று நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவது குறித்து முந்தைய ஐந்து கூட்டங்களில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் விரைந்து அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் தில்லி சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு சர்தார் மன்ஜிந்தர் சிங் சிர்சா கலந்து கொண்டார்.
காற்றின் தரத்தை மேம்படுத்த கண்டறியப்பட்ட அனைத்து வழிகளிலும் உயர்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திரு யாதவ் வலியுறுத்தினார். சாலை மேம்பாடு மற்றும் பழுதுபார்த்தல், கட்டுமானம் மற்றும் கட்டிடக் கழிவுகள் மேலாண்மை, பொதுபோக்குவரத்தை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பகுதிகளில் விரைந்து கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198057®=3&lang=1
***
AD/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2198154)
आगंतुक पटल : 8