பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர் விமானத்திலிருந்து தப்பும் அமைப்பிற்கான அதிக வேக ராக்கெட்-ஸ்லெட் சோதனை வெற்றி

प्रविष्टि तिथि: 02 DEC 2025 6:43PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, விபத்து நிகழும் என கருதும் போது போர் விமானத்தின் விமானி தப்பிக்கும் அமைப்பிற்கான (Fighter Aircraft Escape System) அதிக வேக ராக்கெட்-ஸ்லெட் சோதனையை, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

சண்டிகரில் உள்ள ஏவுகணைச் செயல்பாடு குறித்த ஆராய்ச்சி ஆய்வகத்தில் ரயில் ட்ராக் ராக்கெட் ஸ்லெட்  நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், விமானத்தின் மேற்பகுதிக் கூரையை  துண்டித்தல், விமானி இருக்கையில் இருந்து வெளியேறுதல்   மற்றும் முழு விமான ஊழியர்களை மீட்டெடுக்கும் செயல்முறை ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டன.

இந்தச் சோதனை விமானவியல் மேம்பாட்டு நிறுவனம்  மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்தக் கடினமான இயக்கவியல் சோதனையின் வெற்றியானது, விமானி தப்பிக்கும்vமேம்பட்ட அமைப்பைச் சோதனை செய்யும் உள்நாட்டுத் திறனைக் கொண்ட உயர்மட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது

நெட் சோதனை  அல்லது ஜீரோ - ஜீரோ சோதனை போன்ற நிலையான  சோதனைகளை விட, இயக்கவியல் வெளியேற்றச் சோதனைகள்  மிகவும் சிக்கலானவை. இதுதான் வெளியேறும் இருக்கையின் செயல்திறன் மற்றும் மேற்பகுதிக் கூரை துண்டிப்பு அமைப்பின் திறனை மதிப்பிடுவதற்கான உண்மையான அளவுகோலாகும்.

 

இந்தச் சோதனையில், இலகுரக விமானத்தின் முன்பகுதியைக் கொண்ட இரட்டை-ஸ்லெட் அமைப்பு, பல திட உந்துசக்தி ராக்கெட் மோட்டார்களை  கட்டம் கட்டமாக இயக்கி, துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் செலுத்தப்பட்டது.

காயமடையாத மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட, கருவி பொருத்தப்பட்ட பொம்மையை  பயன்படுத்தி, மேற்பகுதிக் கூரை நொறுங்கும் வடிவம், வெளியேறுதல் மற்றும் விமானியை முழுமையாக மீட்கும் செயல்முறை ஆகியவை உருவகப்படுத்தப்பட்டன.

வெளியேறும் விமானிகள் அனுபவிக்கக்கூடிய முக்கியமான சுமை, திருப்பு விசைகள் மற்றும் முடுக்கம் ஆகியவை இந்தப் பொம்மையின் மூலம் பதிவு செய்யப்பட்டன.

முழு செயல்முறையும் விமானத்திலும், தரையிலும் நிறுவப்பட்ட இமேஜிங் அமைப்புகள் மூலம் படம்பிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படை , விண்வெளி மருத்துவ நிறுவனம்  மற்றும் சான்றளிப்பு அதிகாரிகளின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்த வெற்றிச் சோதனைக்காக டிஆர்டிஓ, ஐஏஎப், ஏடிஏ, எச்ஏஎல் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டுகளைத் தெரிவித்தார். இது, சுயசார்பு நோக்கிய இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவரான டாக்டர் சமீர் வி காமத்தும், இந்த வெற்றிகரமான செயல்விளக்கத்துடன் தொடர்புடைய டிஆர்டிஓ குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197771&reg=3&lang=1

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2198078) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी , Punjabi , Telugu