உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 02 DEC 2025 3:22PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில போதைப்பொருள் சட்ட அமலாக்க நிறுவனங்களின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மத்திய அரசு  ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேசிய குற்றப் பதிவுகள் பிரிவு  வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட நபர்கள்  முறையே 16,777 மற்றும் 16,646 ஆவர். இவர்களில் தண்டனை பெற்றவர்கள் முறையே, 5,509 மற்றும் 6,184 பேர். 

கடத்தல்காரர்களிடம் இருந்து ஏராளமான போதைப்பொருள், சட்டவிரோத மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது விழிப்புணர்வு, மறுவாழ்வு ஆதரவு ஆகியவற்றிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை  இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இன்று (02 டிசம்பர் 2025) இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197528&reg=3&lang=1

***

AD/PKV/SH


(रिलीज़ आईडी: 2197842) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी