ஜல்சக்தி அமைச்சகம்
ராஜஸ்தானில் வறட்சிப் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஜல் ஜீவன் திட்டம் அமல்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 4:27PM by PIB Chennai
ராஜஸ்தானின் வறட்சி பாதித்த பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு வி. சோமண்ணா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், திட்ட நிதி ஒதுக்கீட்டில், கடினமான நிலப்பரப்புகள் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு 30 விழுக்காடு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றார்.
நீண்டகால நிலைத்தன்மையை உறுதிசெய்ய, ஜல் ஜீவன் திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
மாவட்ட அளவில் முன்னேற்றத்தைக் மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, வறட்சி பாதித்த பகுதிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196975®=3&lang=1
***
AD/VK/RK
(रिलीज़ आईडी: 2197556)
आगंतुक पटल : 5