ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய டிஜிட்டல் நிலச் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய நகர்ப்புற நில நிர்வாகம் குறித்த தேசிய கருத்தரங்கை நிலவளத்துறை நடத்துகிறது

प्रविष्टि तिथि: 02 DEC 2025 12:45PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளத் துறை , நாளை ஒரு முக்கியமான தேசிய கருத்தரங்கை நடத்த உள்ளது.  தேசிய புவியியல் அறிவு சார்ந்த நகர்ப்புற வாழ்விடங்கள் மற்றும் நில இருப்பு ஆய்வு குறித்த இந்தக் கருத்தரங்கு, ஜியோஸ்மார்ட் இந்தியா 2025 மாநாடு மற்றும் கண்காட்சியில் ஒரு சிறப்பிடத்தைப் பிடிக்கும்.  இது நகர்ப்புற நிலப் பதிவுகளை மாற்றுவதையும்நாடு முழுவதும் மக்கள் சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கருத்தரங்கு  புவியியல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

இந்தத் தேசிய கருத்தரங்கு, முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், இந்திய சர்வே நிபுணர்கள், மாநில வருவாய் / நிலப்பதிவு அதிகாரிகள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஆறு முக்கியமான அமர்வுகளில் தீவிர விவாதத்திற்காக ஒன்றிணைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197439&reg=3&lang=1

***

AD/PKV/RK


(रिलीज़ आईडी: 2197508) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada