PIB Headquarters
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாடு

प्रविष्टि तिथि: 02 DEC 2025 12:04PM by PIB Chennai

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 2.68 கோடி பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும். இவர்களில் 1.50 கோடி பேர் ஆண்கள், 1.18 கோடி பேர் பெண்கள் ஆவர்.

இவர்களின் நலனுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் முக்கியத் திட்டமாக மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ஐ அமல்படுத்துவதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள்   உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளிக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் பொருளாதார வாய்ப்புகளைப் பெறவும் மத்திய அரசு பல்வேறு தளங்களை உருவாக்கியுள்ளது. இம்முயற்சிகள் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி அனைத்துத் தனிநபர்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்காக சமூகத்திற்கு பங்களிப்பு செய்வதையும் உள்ளடக்கியதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197426&reg=3&lang=1  

***

AD/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2197499) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati