நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 8.34 கோடி பேர் சேர்ந்துள்ளனர்; இவர்களில் 48% பேர் பெண்கள்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 8:14PM by PIB Chennai

09.05.2015 அன்று தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டம், அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், சலுகை பெற்றவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு உலகளாவிய சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இதற்குத் தகுதி பெறுகிறார்கள். 

சந்தாதாரர் 60 வயதை எட்டும்போது ஓய்வூதியப் பலனை அவர்  பெறுவார். எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியப் பலன் 2035 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 31.10.2025 நிலவரப்படி அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மொத்தம் 8,34,13,738 பேர் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் மொத்த பெண்களின் எண்ணிக்கை 4,04,41,135 ஆகும், இது மொத்த சேர்க்கையில் 48% ஆகும்.

இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (01 டிசம்பர் 2025) மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197218&reg=3&lang=1

(Release ID: 2197218)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2197323) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada