தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு மூலம் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை எல்லையற்ற வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது: இந்திய தொழில் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் உரை
प्रविष्टि तिथि:
01 DEC 2025 5:47PM by PIB Chennai
மும்பையில் இன்று (01.12.2025) நடைபெற்ற சிஐஐ பிக் பிக்சர் உச்சிமாநாட்டின் 12-வது பதிப்பில், 'ஏஐ சகாப்தம் - படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை இணைத்தல்' என்ற கருப்பொருளில் தொடக்க உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, செயற்கை நுண்ணறிவின் வருகையால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மாபெரும் வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்திற்கான கொள்கை சீர்திருத்தங்கள் குறித்த சிஐஐ-யின் வெள்ளை அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
வேவ்ஸ் உச்சிமாநாட்டை வெறும் ஒரு நிகழ்வாகப் பார்க்காமல், படைப்பாற்றல் மற்றும் முன்னேற்றத்தைத் தூண்டும் ஒரு தொடர் இயக்கமாகத் தொழில் துறையினர் பார்க்க வேண்டும் என்று திரு ஜாஜூ கேட்டுக்கொண்டார். உணவு, உடை, இருப்பிடம் போன்று பொழுதுபோக்குத் துறையும் நாகரிகத்தின் அடிப்படைத் தூணாக உள்ளது என்றும், இது மக்களை ஒன்றிணைத்து, சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்குத் துறை சாரந்த பொருளாதாரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ரூ.3 லட்சம் கோடி பங்களிக்கிறது. இருப்பினும், உலகளாவிய ஊடகச் சந்தையில் இந்தியா 2% மட்டுமே கொண்டுள்ளது என அவர் கூறினார்.
அரசு ஒரு உந்துசக்தியாகச் செயல்பட்டு, இத்துறைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் என்று அவர் உறுதியளித்தார். திறன் இடைவெளிகளைப் போக்க, மும்பையில் இந்திய படைப்பு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்பட்டு வருவதாகவும், கோரேகான் ஃபிலிம் சிட்டியில் இதற்கான வளாகம் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197101®=3&lang=1
****
AD/SE/SH
(रिलीज़ आईडी: 2197303)
आगंतुक पटल : 9